'சுதந்திரமாக பேசுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு': மணிப்பூர் முதல்-மந்திரி கருத்து


சுதந்திரமாக பேசுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு: மணிப்பூர் முதல்-மந்திரி கருத்து
x
தினத்தந்தி 19 Aug 2023 1:21 AM GMT (Updated: 19 Aug 2023 9:46 AM GMT)

ஜனநாயகத்தில் சுதந்திரமாக பேசுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என மணிப்பூர் முதல் மந்திரி தெரிவித்தார்.

இம்பால்,

மணிப்பூரில் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில், அங்கு குகி மக்கள் அதிகமாக வாழும் 5 மாவட்டங்களுக்கு என தனி நிர்வாகம் வேண்டும் என குகி சமூக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதன் தொடர்ச்சியாக தங்கள் பகுதிக்கு தனி தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. வேண்டும் என பிரதமர் மோடிக்கு குகி சமூக எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் கடிதம் எழுதியுள்ளனர். இதில் 7 பேர் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த விவகாரம் மாநில அரசில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இம்பாலில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்-மந்திரி பைரேன் சிங்கிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், 'ஜனநாயகத்தில் சுதந்திரமாக பேசுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு' என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றிருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.


Next Story