'ஒவ்வொருவரும் நல்ல மனிதராக வாழ வேண்டும்'; முதல்-மந்திரி சித்தராமையா அறிவுரை


ஒவ்வொருவரும் நல்ல மனிதராக வாழ வேண்டும்; முதல்-மந்திரி சித்தராமையா அறிவுரை
x

ஒவ்வொருவரும் நல்ல மனிதராக வாழ வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவுரை கூறி உள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக அரசின் பெண்கள்-குழந்தைகள் நலத்துறை சார்பில் உலக மூத்த குடிமக்கள் தின விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

மூத்த குடிமக்களை கவுரவமாக நடத்துவது மற்றும் அவர்களது வாழ்க்கையில் உள்ள மாண்புகளை நாம் பின்பற்றுவது தான் அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை. நாம் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதை விட வாழ்கின்ற காலத்தில் பயனுள்ள வாழ்க்கையை வாழ்வது தான் முக்கியம். ஒவ்வொருவரும் நல்ல மனிதராக வாழ வேண்டும். அது மிக முக்கியம் ஆகும்.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை வருகிற பட்ஜெட்டில் உயர்த்தப்படும். அவரவர்கள் தங்களின் வீடுகளில் உள்ள மூத்த குடிமக்களை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அவர்களை நாம் கவனிக்காமல் விடக்கூடாது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இதில் பெண்கள்-குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மூத்த குடிமக்களுக்கு சித்தராாமையா நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.


Next Story