தன்னை கடித்த பாம்பை கடித்த சிறுவன்; பாம்பு இறந்தது


தன்னை கடித்த பாம்பை கடித்த சிறுவன்; பாம்பு இறந்தது
x

தன்னை கடித்த பாம்பை 12 வயது சிறுவன் பழிவாங்கினான். ஆனால் அந்த நாகப்பாம்பு இறந்துள்ளது.

ராய்ப்பூர்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு வடகிழக்கே 350 கிமீ தொலைவில் உள்ள ஜாஷ்பூர் மலைவாழ் பகுதி உள்ளது. இங்கு பாஹடி கோர்வா என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதியில் 70 வகையான பாம்புகள் காணப்படுவதால், இந்த பகுதியை உள்ளூர் மக்கள் நாகலோகம் என்றும் அழைக்கிறார்கள்.சத்தீஸ்கர் மாவட்டத்தில் பாம்பு கடித்தால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை உள்ளது.

ஜாஷ்பூரை ஒட்டிய பகுதியில் 70க்கும் மேற்பட்ட வகை பாம்புகள் காணப்படுகின்றன, இதில் நான்கு வகையான நாகப்பாம்புகள் மற்றும் மூன்று அதிக விஷமுள்ள பாம்புகள் உள்ளன.சத்தீஸ்கரில் காணப்படும் 80 சதவீத பாம்பு இனங்கள் ஜாஷ்பூரில் காணப்படுவதாக பாம்பு மீட்பாளர் கேசர் ஹுசைன் தெரிவித்தார்.

ஜாஷ்பூரில் மொததம் 26 வகையான பாம்புகள் காணப்படுகின்றன, ஆனால் இதில் ஆறு இனங்கள் மட்டுமே விஷம் கொண்டவை, மீதமுள்ள 20 இனங்கள் விஷமற்றவை. ஜாஷ்பூரில் மூன்று ஆண்டுகளில் 35 பேர் பாம்பு கடிபட்டு இறந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு பாம்பு கடித்து 16 பேர் உயிரிழந்துள்ளனர். 2018ல் 6 பேரும், 2019ல் 12 பேரும் பாம்புக்கடியால் இறந்துள்ளனர் என அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜாஷ்பூர் மாவட்டம் பந்தர்பாத் கிராமத்தில் தீபக் என்ற 12 வயது சிறுவன் கடந்த திங்கள்கிழமை தனது வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது நாகப்பாம்பு ஒன்று சிறுவனை கடித்துள்ளது.

இதையடுத்து தன்னை கடித்த அந்த நாகப்பாம்பை சிறுவன் வளைத்துப் பிடித்து தனது கையில் சுற்றிக் கொண்டு அந்த பாம்பை கடித்துள்ளான். தன்னை கடித்த பாம்பை 12 வயது சிறுவன் பழிவாங்கினான். ஆனால் அந்த நாகப்பாம்பு இறந்துள்ளது.

இதையடுத்து பயந்து போன அவரது குடும்பத்தினர் அந்த சிறுவனை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். தன்னை கடித்த பாம்பை சிறுவன் கடித்தான் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், உடனடியாக " சிறுவனுக்கு பாம்பு விஷம் முறிவு ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளித்தனர். பின்னர் நாள் முழுவதும் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தற்போது சிறுவன் பூர்ண நலமாக இருப்பதை அடுத்து வீட்டு அனுப்பப்பட்டதாக" மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெம்ஸ் மின்ஜ் கூறினார்.

இதுகுறித்து அந்த சிறுவன் கூறுகையில், "பாம்பு என் கையை கடித்தது. நான் மிகுந்த வலி வேதனையில் இருந்தேன். பின்னர் என்னை கடித்த அந்த பாம்பை வளைத்துப் பிடித்து கையில் சுற்றிக்கொண்டு இரண்டு முறை கடித்தேன். இது அனைத்தும் ஒரு நொடியில் நடந்தது, "என்று கூறினார்.

பாம்பு கடித்த எந்த அறிகுறிகளும் தீபக்கு தெரியவில்லை மற்றும் பாம்பு கடித்தபோது விஷம் சிறுவனின் உடலில் பரவததால் விரைவாக குணமடைந்தார், ஆனால் விஷம் வெளியேறவில்லை. இத்தகைய பாம்புக்கடிகள் வலிமிகுந்தவை மற்றும் கடித்த இடத்தைச் சுற்றி சில அறிகுறிகளை மட்டுமே காட்டக்கூடும்" என்று பாம்பு நிபுணர் கைசர் ஹுசைன் கூறினார்.


Next Story