மிசோரம் மாநிலத்தில் பார்ட்டிகளில் பயன்படுத்த கடத்தப்பட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகள் பறிமுதல்!


மிசோரம் மாநிலத்தில் பார்ட்டிகளில் பயன்படுத்த கடத்தப்பட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகள் பறிமுதல்!
x

மிசோரம் மாநிலத்தில், ஒரே நாளில் ரூ.168 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலமான மிசோரம் மாநிலத்தில், மியான்மர் எல்லையில் அமைந்துள்ள பகுதிகளில் ஒரே நாளில் ரூ.168 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மிசோரம் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி, அசாம் ரைபிள்ஸ் (ஏஆர்) மற்றும் மிசோரம் காவல்துறையின் கூட்டுக்குழு இணைந்து நடத்திய சோதனையில், ஏராளமான மெத்தாம்பெட்டமைன் போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளது.

அதனப்டி, மியான்மர் எல்லையான சம்பாய் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.167.86 கோடி மதிப்பிலான போதை மெத்தம்பெட்டமைன் மாத்திரைகளை கைப்பற்றியுள்ளது. பெரும்பாலான பார்ட்டிகளில் போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன் மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.

மெல்புக் கிராமத்தில் ஒரு வாகனத்தை மறித்த போலீசார், அதை சோதனை செய்ததில், 55.80 கிலோ மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் அந்த வழிப்பறி வியாபாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. 5,05,000 மெத்தாம்பெட்டமைன் மாத்திரைகள்(55.80 கிலோ) கைப்பற்றப்பட்டன.

வாகனத்தின் பல்வேறு பெட்டிகளில் ரூ.167.86 கோடி மதிப்பிலான கடத்தல் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.குற்றம் சாட்டப்பட்ட நபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருட்கள் ஆகியன சோகாவ்தர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

மிசோரமில் ஒரே சோதனையில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை இதுவாகும். மிசோரமில் கடந்த மூன்று ஆண்டுகளில், அசாம் ரைபிள்ஸ் போலீஸ் பிரிவு, ரூ.200 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில், மிசோரமில், குறிப்பாக இந்தியா-மியான்மர் எல்லையில் மெத்தாம்பெட்டமைன் மாத்திரைகள் கடத்தப்படுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதை தடுக்க போலீசார் தீவிரமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story