நிலைத்தன்மையற்ற பாகிஸ்தான் உலக நாடுகளுக்கு ஆபத்து - பரூக் அப்துல்லா


நிலைத்தன்மையற்ற பாகிஸ்தான் உலக நாடுகளுக்கு ஆபத்து - பரூக் அப்துல்லா
x

நிலைத்தன்மையற்ற பாகிஸ்தான் உலக நாடுகளுக்கு ஆபத்தானது என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான இம்ரான் கான், ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று இஸ்லாமாபாத் கோர்ட்டிற்கு ஆஜராக வந்தபோது, ராணுவத்தால் கோர்ட்டு வளாகத்திலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

இம்ரான் கானின் கைது, அவரின் கட்சியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாகிஸ்தான் முழுவதும் இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். பல இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், நிலைத்தன்மையற்ற பாகிஸ்தான் என்பது இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு ஆபத்து. வலிமையான, ஜனநாயகமான பாகிஸ்தான் எங்களுக்கு வேண்டும். பாகிஸ்தானில் ஜனநாயகம் வளர்ந்தால் அது இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும். பாகிஸ்தான் உள்நாட்டு சூழ்நிலை மிகவும் ஆபத்தில் உள்ளது. அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலையும் மோசமாக உள்ளது' என்றார்.


Next Story