அக்னிபத் திட்டம் தொடர்பாக ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு


அக்னிபத் திட்டம் தொடர்பாக ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு
x

பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று முப்படைகளின் தலைமை தளபதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

ராணுவத்துக்கு ஆள்சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

ஆனால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் ரெயில்கள், பஸ்களை தீயிட்டு கொளுத்தி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். 4-வது நாளாக நேற்றும் வடமாநிலங்களில் போராட்டம் நடந்தது. இன்றும் போராட்டம் தொடருகிறது.

இந்த நிலையில், 'அக்னிபத்' போராட்டங்களுக்கு மத்தியில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று முப்படைகளின் தலைமை தளபதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே, அக்னிவீரர் ஆட்சேர்ப்பு திட்டம் தொடர்பாக, ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி இன்று பிற்பகல் 2 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தும் இளைஞர்களின் சந்தேகங்களை போக்கும் வகையில், இந்த திட்டம் குறித்த விரிவான விவரங்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இன்று காலை அக்னிபாத் திட்டத்தின் கீழ், ஆட்சேர்ப்பு குறித்த விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story