டெல்லி மதுபான முறைகேடு வழக்கு: கவிதாவிடம் சி.பி.ஐ. நேரில் விசாரணை


டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:  கவிதாவிடம் சி.பி.ஐ. நேரில் விசாரணை
x

மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் கவிதாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

புதுடில்லி,

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் மகளும், சட்டபேரவை உறுப்பினருமான கவிதாவுக்கு டெல்லியில் நடந்த மதுபான முறைகேடு வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் 6-ந் தேதி) விசாரணைக்கு ஆஜராகும்படி கவிதாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு கடிதம் அனுப்பிய கவிதா, "ஏற்கனவே திட்டமிட்ட சில பணிகள் இருப்பதால் டிச. 6-ந் தேதி விசாரணையில் என்னால் ஆஜராக முடியாது. அதற்கு பதிலாக வரும் 11, 12, 14 அல்லது 15ந் தேதிகளில் ஐதராபாத்தில் உள்ள எனது இல்லத்தில் உங்களை சந்திக்க முடியும்" என கூறியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ. வருகிற 11-ந் தேதி ஐதாரபாத்தில் உள்ள கவிதாவின் இல்லத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என அறிவித்தது.

இதனையடுத்து ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


Next Story