விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது: பிரதமர் மோடி


விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 28 Dec 2023 4:52 AM GMT (Updated: 28 Dec 2023 4:53 AM GMT)

விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"விஜயகாந்த மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்தின் நடிப்பு பலரின் இதயங்களை கவர்ந்தது. பொது சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விஜயகாந்தின் மறைவு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை நிரப்புவது கடினம். விஜயகாந்துடனான எனது நினைவுகளை அன்புடன் நினைவுகூர்கிறேன்." என தெரிவித்துள்ளார்.


Next Story