இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 63 ஆக குறைந்தது


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 63 ஆக குறைந்தது
x

கோப்புப்படம் 

கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில், 77 பேர் குணமடைந்தனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. நேற்று முன்தினம் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 63 பேருக்கு மட்டும் பாதிப்பு உறுதியானது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 543 ஆக அதிகரித்தது.

கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில், 77 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 737 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 15 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 1,910 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வந்தனர்.

கொரோனாவுக்கு நேற்று முன்தினம் பலி எண்ணிக்கை 2 ஆக காட்டப்பட்டது. நேற்று ஒருவர் மட்டும் உயிரிழந்தார். மொத்த உயிரிழப்புகள் 5 லட்சத்து 31 ஆயிரத்து 896 ஆக அதிகரித்தது.


Next Story