இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 21 ஆக குறைவு
கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இறங்குமுகமாக உள்ளது. நேற்று முன்தினம் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தினசரி பாதிப்பு 21 ஆக குறைந்தது.
இதுவரை கொரோனாவுக்கு ஆளானவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 95 ஆயிரத்து 332 ஆக உயர்ந்தது. 24 மணி நேரத்தில் 36 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 61 ஆயிரத்து 968 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 15 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 1,449 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். தொடர்ந்து 9-வது நாளாக கொரோனா உயிரிழப்பு இல்லை. அதனால், மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 915 ஆக நீடிக்கிறது.
Related Tags :
Next Story