வேகமெடுக்கும் கொரோனா தொற்று: டெல்லியில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அதிகரிப்பு


வேகமெடுக்கும் கொரோனா தொற்று: டெல்லியில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அதிகரிப்பு
x

கோப்புப்படம்

வேகமெடுக்கும் கொரோனா தொற்று காரணமாக, டெல்லியில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அதிகரித்துள்ளன.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா மேலும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 14-ந் தேதி முதல் தினந்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொற்றால் பாதித்து வருகின்றனர்.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளை சுகாதார அதிகாரிகள் முடுக்கி விட்டு வருகின்றனர். குறிப்பாக அதிக தொற்று காணப்படும் பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

3 அல்லது அதற்கு மேல் பாதிக்கப்பட்டோரை கொண்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்று அல்லது 2 பேர் பாதிக்கப்பட்டாலும் அந்த பகுதிகளை மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலங்களாக மாற்றப்பட்டு உள்ளன.

இதனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 17-ந்தேதி வரை 190 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 322 ஆக அதிகரித்து உள்ளது.


Next Story