தொடர்ந்து அதிகரிப்பு... இந்தியாவில் கடந்த 8 மாதங்களில் இல்லாத தினசரி கொரோனா பாதிப்பு.!


தொடர்ந்து அதிகரிப்பு... இந்தியாவில் கடந்த 8 மாதங்களில் இல்லாத தினசரி கொரோனா பாதிப்பு.!
x

கோப்புப்படம் 

நாட்டிலேயே அதிகளவில் கேரளாவில் 3 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

அதிரடி உயர்வு

நாட்டில் 4 நாள் வீழ்ச்சிக்கு பின்னர் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு எழுச்சி கண்டது. நேற்று முன்தினம் 10 ஆயிரத்து 542 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை அதிரடியாக 12 ஆயிரத்தை கடந்தது. 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 591 பேருக்கு தொற்று உறுதியானது. இது கடந்த 8 மாதங்களில் அதிகபட்ச பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே அதிகளவில் கேரளாவில் 3 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 419 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு தினசரி பாதிப்பு விகிதம் 5.46 சதவீதமாக பதிவானது.

குணம் அடைந்தோர்

நேற்று ஒரு நாளில் நாட்டில் 10 ஆயிரத்து 827 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 42 லட்சத்து 61 ஆயிரத்து 476 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்திருக்கிறார்கள்.

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து ஏறுகிறது. நேற்று இந்த எண்ணிக்கையில் 1,724 உயர்ந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாடெங்கும் 65 ஆயிரத்து 286 பேர் கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்தனர்.

தொற்றால் 40 பேர் பலி

நாட்டில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றினால் 38 பேர் பலியாகினர். நேற்று இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து 40 ஆனது.

கேரளாவில் விடுபட்ட கொரோனா பலிகளில் 11-ஐ கணக்கில் சேர்த்தனர்.

டெல்லியில் 6 பேரும், மராட்டியத்திலும், உ.பி.யிலும் தலா 4 பேரும், அரியானா, கர்நாடகம், கேரளா, தமிழ்நாட்டில் தலா 2 பேரும், மேற்கு வங்காளம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், புதுச்சேரி, மத்திய பிரதேசம், இமாசலபிரதேசம், சத்தீஷ்காரில் தலா ஒருவரும் நேற்று தொற்றால் உயிரிழந்தனர்.

இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றினால் மொத்தம் 5 லட்சத்து 31 ஆயிரத்து 230 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 220 கோடியே 66 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story