சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை


சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை
x

சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த மே மாதம் 23-ந்தேதி சென்னை ஐகோர்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஜனாதிபதி உத்தரவின்படி சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் கடந்த மே 24-ந்தேதி ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

இந்நிலையில் நீதிபதி ஆர்.மகாதேவனை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.




Next Story