சி.என்.ஜி. கியாஸ் விலை குறைந்தது


சி.என்.ஜி. கியாஸ் விலை குறைந்தது
x
தினத்தந்தி 6 March 2024 2:34 AM GMT (Updated: 6 March 2024 6:28 AM GMT)

சி.என்.ஜி. கியாஸ் விலை குறைந்துள்ளதால் டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மும்பை,

மும்பையில் ஆட்டோ, டாக்சி மற்றும் கார் என 10 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் சி.என்.ஜி. கியாஸ் மூலம் இயக்கப்படுகின்றன. அரசின் மகாநகர் கியாஸ் நிறுவனம் பெட்ரோல் பங்குகள் மூலம் சி.என்.ஜி. கியாசை விற்பனை செய்து வருகிறது. நேற்று சி.என்.ஜி. விலை குறைக்கப்பட்ட அறிவிப்பை மகாநகர் கியாஸ் நிறுவனம் வெளியிட்டது. இதன்படி சி.என்.ஜி. கிலோவுக்கு 2 ரூபாய் 50 காசு குறைந்து உள்ளது.

ரூ.76-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ சி.என்.ஜி. விலை ரூ.73.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து உள்ளது. இந்த தகவலை மகாநகர் கியாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சி.என்.ஜி. விலை குறைக்கப்பட்டது வாகன ஓட்டிகள் குறிப்பாக டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story