சத்தீஸ்கரில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க மசோதா தாக்கல்!


சத்தீஸ்கரில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க மசோதா தாக்கல்!
x

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீடு வரம்பு 76 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராய்பூர்,

சத்தீஸ்கர் மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மற்றும் பட்டியலினத்தவர்கள் (எஸ்சி) சமூகத்தினருக்கான சேர்க்கை மற்றும் அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான இரண்டு சட்டதிருத்த மசோதாக்களை சத்தீஸ்கர் சட்டசபையில் வெள்ளிக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது.

பட்டியல் பழங்குடியினருக்கு 32 சதவீதமும், பட்டியல் சாதியினருக்கு 13 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க சட்டமன்றம் முன்மொழிந்துள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, இதன்மூலம் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீடு வரம்பை 76 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Next Story