'சந்திரயான் 3' விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவு- இஸ்ரோ தகவல்


சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவு- இஸ்ரோ தகவல்
x

நிலவை ஆய்வுசெய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ வரும் 14-ந்தேதி விண்ணில் செலுத்தவுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா,

பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வுசெய்ய ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவு செய்துள்ளனர். ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தற்போது எல்.வி.எம். 3 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.

சந்திரயான்-3 விண்கலம் வரும் 14-ந்தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து அதிக எடையை தாங்கி செல்லும் மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்கிறது.

இந்த நிலையில், 'சந்திரயான் 3' விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவுபெற்றுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story