'சந்திரயான் 3' தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த ஊழியர்களுக்கு 17 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என தகவல்


சந்திரயான் 3  தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த ஊழியர்களுக்கு  17 மாதமாக  சம்பளம் வழங்கவில்லை என தகவல்
x

‘சந்திரயான் 3’ தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த ராஞ்சியில் உள்ள கனரக பொறியியல் நிறுவனத்தில் 17 மாதமாக யாருக்கும் ஊதியம் வழங்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் வெள்ளிக்கிழமை மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்தநிலையில், சந்திரயான் -3 தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த ராஞ்சியில் உள்ள கனரக பொறியியல் நிறுவனத்தில் 17 மாதமாக யாருக்கும் ஊதியம் வழங்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளாது. மத்திய கனரக தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இதில் 3,000 பேர் பணியாற்றி வருவதாகவும் ரூ 1,000 கோடி கேட்ட நிலையில் மத்திய அரசு எந்த உதவியும் செய்ய வில்லை என அமைச்சகம் பதில் அளித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story