தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி போட திட்டம்


தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி போட திட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2023 8:45 PM GMT (Updated: 12 Feb 2023 8:46 PM GMT)

9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான எச்.பி.வி. தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி,

உலக அளவில் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் 25 சதவீதம் பேர், இந்திய பெண்கள் ஆவர். ஆண்டுதோறும் 80 ஆயிரம் இந்திய பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 35 ஆயிரம் பேர் மரணத்தை தழுவுகின்றனர்.

இதை கருத்தில்கொண்டு, 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான எச்.பி.வி. தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முதல்கட்டமாக, கர்நாடகா, தமிழ்நாடு, மிசோரம், சத்தீஷ்கார், மராட்டியம், உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த மாநிலங்களில் மொத்தம் 2 கோடியே 55 லட்சம் சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story