11 ஏக்கர் நிலத்தை அபகரித்த சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு


11 ஏக்கர் நிலத்தை அபகரித்த சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 6:45 PM GMT)

இறந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து 11 ஏக்கர் நிலத்தை அபகரித்த சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோலார்

நிலம் அபகரிப்பு

கோலார் தாலுகா ஹூத்தூர் அருகே திப்பசந்திரா பகுதியில் 11 ஏக்கர் நிலத்தை கோலார் சார் பதிவாளர் பிரசாந்த் குமார் அபகரித்து இருப்பதாக கூறி அதே கிராமத்தை சேர்ந்த நவீன்குமார் என்பவர், கோலார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில், கோலார் சார் பதிவாளர் பிரசாந்த் குமார் உள்பட 12 பேர் இறந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து 11 ஏக்கர் நிலத்தை அபகரித்து உள்ளனர்.

இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

வழக்குப்பதிவு

இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கோலார் சார் பதிவாளர் பிரசாந்த் குமார் உள்பட 12 பேர் இறந்தவர்களின் பெயரில் போலியாக ஆவணங்களை தயாரித்து 11 ஏக்கர் நிலத்தை அபகரித்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கோலார் போலீசார் சார் பதிவாளர் பிரசாந்த் குமார் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனால் அவர்கள் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.


Next Story