வினோத சடங்கு: ஜார்க்கண்டில் குழந்தைகள், மரங்களுக்கு இடையே திருமணம்


வினோத சடங்கு:  ஜார்க்கண்டில் குழந்தைகள், மரங்களுக்கு இடையே திருமணம்
x

கோப்பு படம்

ஜார்க்கண்டில் குழந்தைகளின் ஆயுள், வருங்கால நலனுக்காக அவர்களை மரங்களுடன் திருமணம் செய்யும் வினோத சடங்கை பழங்குடியினர் கடைப்பிடித்து வருகின்றனர்.



ராஞ்சி,


நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை மத வேற்றுமையின்றி உழவர் திருநாளாக கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் மக்கள் அதனை கொண்டாடினர்.

ஜார்க்கண்டில் வசிக்கும் ஒரு பிரிவினர் மகர சங்கராந்திக்கு அடுத்த நாளில் வினோத சடங்கு ஒன்றை மரபு சார்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள், மகர சங்கராந்தியின் 2-வது நாளில் தங்களது குழந்தைகளை சிறிய பாலம் அல்லது மரங்களுடன் சேர்த்து திருமணம் செய்து வைக்கும் நிகழ்வை நடத்துகின்றனர்.

இதனால், அந்த குழந்தைகளின் ஆயுள் நீடிக்கும். அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களின் வருங்கால துணைக்கும் நலம் சேரும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர்.

ஒடிசா மற்றும் வங்காள எல்லை பகுதிகளில் வசித்து வரும் மக்களிடையே இந்த மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு குழந்தைகள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? என பார்ப்போம்.

குழந்தைகளுக்கு பொதுவாக வாயின் கீழ் தாடையில் 2 முன்பற்கள் முளைக்கும். அதனை தொடர்ந்து, 4 முதல் 8 வாரங்களில் மேல் தாடையில் 4 முன்பற்கள் முளைக்க தொடங்கும்.

ஆனால், குழந்தைகளின் மேல் வாயில் முதல் இரண்டு பற்கள் முதலில் தோன்றுவது, அந்த குழந்தைக்கு துரதிர்ஷ்டம் என நாங்கள் நினைக்கிறோம். எனது பேரனுக்கும் அதுபோன்று இருந்தது.

அதுபோன்ற குழந்தைகள் வளர்ந்து, பெரியவர்களாக ஆனதும், வழக்கம்போல் திருமணம் நடக்கும். அவர்களோ அல்லது அவர்களின் துணையோ இளம் வயதில் மரணம் அடைந்து விடும் நிகழ்வை எங்களது முன்னோர்கள் கண்டுள்ளனர்.

அதனாலேயே, இதுபோன்ற குழந்தைகள் 5 வயது நிறைவடைந்ததும், ஒரு சிறிய பாலத்திற்கோ அல்லது ஒரு மரத்திற்கோ நாங்கள் திருமணம் செய்து வைக்கிறோம். இதனால், அவர்களது ஜாதகத்தில் உள்ள தீங்குகள் களையப்படும் என்று சாரி சிங் சதார் என்ற பெண் ஒருவர் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையிலேயே இந்த வினோத திருமண சடங்கிற்கு குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது பல ஆண்டுகளாக பழங்குடி மக்களிடையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


Next Story