சிபிஐ-க்கு வழங்கப்பட்டு இருந்த பொது அனுமதி ரத்து: நிதிஷ்குமார் மீது பாஜக விமர்சனம்


சிபிஐ-க்கு வழங்கப்பட்டு இருந்த பொது அனுமதி ரத்து: நிதிஷ்குமார் மீது பாஜக விமர்சனம்
x

நிதிஷ்குமார்

நிதிஷ் குமாரின் இந்த முடிவை விமர்சித்துள்ள பாஜக, ஊழல்வாதிகளை பாதுகாக்கவே நிதிஷ் குமார் இந்த முடிவை எடுத்துள்ளதாக விமர்சித்துள்ளது

பாட்னா,

பீகார் மாநிலத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு தரப்பட்டிருந்த பொது அனுமதியை நிதிஷ்குமார் அரசு ரத்து செய்தது. லாலு பிரசாத் குடும்பத்தினர் தொடர்புடைய வேலைவாய்ப்பு மோசடி குறித்து சிபிஐ விசாரித்து வரும் நிலையில் பீகார் அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்தது.

சிபிஐக்கு வழங்கப்பட்டு இருந்த பொது அனுமதி திரும்பப்பெறப்பட்டதன் மூலம் இனி மாநில அரசின் அனுமதி இல்லாமல் அல்லது நீதிமன்ற உத்தரவு இன்றி நேரடியாக சிபிஐயால் பீகாரில் விசாரணையை முன்னெடுக்க முடியாது.

இந்த நிலையில், நிதிஷ் குமாரின் இந்த முடிவை விமர்சித்துள்ள பாஜக, ஊழல்வாதிகளை பாதுகாக்கவே நிதிஷ் குமார் இந்த முடிவை எடுத்துள்ளதாக விமர்சித்துள்ளது. மேலும், பாஜகவின் இந்த முடிவு கூட்டாட்சிக்கு தத்துவத்திற்கு எதிரானது என்றும் பாஜக சாடியுள்ளது.


Next Story