மேக்கப் போட்டு மணப்பெண்ணின் அழகை கெடுத்து விட்டதாக பியூட்டிஷியன் மீது போலீசில் புகார்
மேக்கப் போட்டு மணப்பெண்ணின் அழகை கெடுத்து விட்டதாக பியூட்டிஷியன் மீது போலீசில் புகார் அளிக்கபட்டு உள்ளது.
போபால்
மத்திய பிரதேசத்தில் ஒரு விசித்திரமான வழக்கு நடந்துள்ளது. திருமணத்திற்காக புதுப்பெண்ணிற்கு மேக்கப் போட வந்த பியூட்டிஷியன் மணப்பெண்ணின் அழகை கெடுத்துவிட்டதாக மணப்பெண்ணின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
டிசம்பர் 3ந்தேதி மணமகள் ராதிகா சென் தனது ஒப்பனைக்காக அழகு நிலையம் நடத்தும் மோனிகா பதக்கை அணுகி உள்ளார். திருமணமான அன்று, குடும்பத்தினர் பியூட்டிசியனுக்கு போன் செய்து உள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர்,மோனிகா பதக் வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டதாக கூறி உள்ளார்.
மணப்பெண்ணிற்கு தனது பார்லரில் பணிபுரியும் பெண்ணை மேக்கப் போடச் சொல்லி உள்ளார். அங்கு பணிபுரியும் புதிய ஊழியர் மணமகளுக்கு மேக்கப் போட்டு அவரது அழகை பியூட்டிமுழுவதுமாக கெடுத்துவிட்டார்.
இது குறித்து மணப்பெண்ணின் குடும்பத்தினர் மோனிகா பதக்கிடம் புகார் அளித்தபோது, அவர் செய்த தவறை ஏற்காமல் மணமகளின் குடும்பத்தினரை மிரட்டத் தொடங்கினார்.
இதை தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் செய்து உள்ளனர். பியூட்டி பார்லர் நடத்தும் பெண் நிபுணர் மீது மோசமான மேக்கப் மற்றும் அநாகரீகமாக பேசியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இது குறித்து கோட்வாலி போலீஸ் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பெண்ணின் அழகை கெடுக்குமாறு மணப்பெண்ணிற்கு மேக்கப் போட்டதாகவும், செல்போனில் மிக அநாகரிகமாக மிரட்டல் விடுத்து, சென் சமூகத்தினர் மீது சாதிவெறிக் கருத்துகளை வெளியிட்டதாகவும் மணமகளின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.