அமைதியாக இருங்க! இல்லாவிட்டால் அமலாக்கத்துறை வரும்- எதிர்க்கட்சி எம்.பி.யை எச்சரித்த மீனாட்சி லெகி


அமைதியாக இருங்க! இல்லாவிட்டால் அமலாக்கத்துறை வரும்- எதிர்க்கட்சி எம்.பி.யை எச்சரித்த மீனாட்சி லெகி
x

அமைதியாக இருக்காவிட்டால் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும் என்று எதிர்க்கட்சி எம்.பி.யை மத்திய அமைச்சர் மீனாட்சி லெகி எச்சரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) மக்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. முன்னதாக இந்த மசோதா மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது பேசிய மத்திய அமைச்சரும் பாஜக எம்.பியுமான மீனாட்சி லேகி, "அமைதியாக இருங்கள் அல்லது அமலாக்கத்துறை உங்கள் வீட்டிற்கு வரலாம்" என்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அமைச்சரின் இந்த பேச்சை விமர்சித்து வருகின்றனர்.


Next Story