பிரதமர் மோடியுடன் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு


பிரதமர் மோடியுடன் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு
x

பிரதமர் மோடியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்தார்.

டெல்லி,

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த ஷேக் ஹசீனா குடியரசு தலைவர் மாளிகை சென்றார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.

பின்னர், இரு நாட்டு தலைவர்களும் இருநாட்டு உறவு, வர்த்தகம், நீர்வளம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் இரு நாடுகளை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது,

இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற வரும் வங்காளதேசத்தினர் எளிதில் விசா பெற இ-மருத்துவ விசா நடைமுறை அமல்படுத்தப்படும்.

வங்காளதேசத்தின் வடக்கு-மேற்கு பகுதி மக்கள் பலன் பெறும் வகையில் அந்நாட்டின் ரங்க்பூர் பகுதியில் புதிய இந்திய தூதரகம் திறக்கப்படும்.

டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் இந்தியா - வங்காளதேசம் இடையேயான ஆட்டத்தில் இரு தரப்பிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story