அயோத்தி ராமர் கோவில் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்படுகிறது: அறக்கட்டளை தகவல்


அயோத்தி ராமர் கோவில் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்படுகிறது: அறக்கட்டளை தகவல்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 12 Sep 2022 4:59 AM GMT (Updated: 12 Sep 2022 5:41 AM GMT)

அயோத்தி ராமர் கோவில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தி,

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோயில் கட்டுவதற்கான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறும்போது, "இந்த கூட்டத்தில் 15 அறக்கட்டளை உறுப்பினர்களில் 14 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கோயில் வளாகத்தில் ராமாயண காலத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் முக்கிய இந்து சமயப் பார்ப்பனர்களின் சிலைகளை வைக்க முடிவுசெய்யப்பட்டு உள்ளது.

நீண்ட ஆலோசனை மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் ஆலோசனைகளுக்குப் பிறகு, அறக்கட்டளையின் விதிகள் மற்றும் துணை விதிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது. நிபுணர்கள் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் ராமர் கோவில் கட்டுவதற்கு மட்டும் ரூ.1,800 கோடி செலவாகும் என அறக்கட்டளை மதிப்பிட்டுள்ளது.

2023 டிசம்பரில் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிடும். 2024 ஜனவரியில் மகர சங்கராந்தி பண்டிகையின்போது ராமர் கருவறையில் அமர்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது". இவ்வாறு சம்பத் ராய் கூறினார்.


Next Story