சந்திரயான்-3 விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்: ஜனாதிபதி வாழ்த்து


சந்திரயான்-3 விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்: ஜனாதிபதி வாழ்த்து
x

சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இஸ்ரோ செலுத்தியது.

புதுடெல்லி,

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது. சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இஸ்ரோ செலுத்தியது. சந்திரயான் 3 வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், சந்திரயான்- 3 விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் சந்திரயான்-3 ஐ இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோ குழுவிற்கும், சாதனையைச் செய்ய அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்திற்கான தேசத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது நிரூபிக்கிறது. சந்திர பயணத்தின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.


Next Story