நான் வழக்கறிஞர்... ஒருநாள் கோர்ட்டில் ஆஜராகலாம் - மம்தா பானர்ஜி


நான் வழக்கறிஞர்... ஒருநாள் கோர்ட்டில் ஆஜராகலாம் - மம்தா பானர்ஜி
x

Image Courtesy: PTI

நான் வழக்கறிஞர்... என்றாவது ஒருநாள் நான் கோர்ட்டில் ஆஜராகலாம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள மாநில முதல்-மந்திரியுமானவர் மம்தா பானர்ஜி. இவர் கொல்கத்தா ஐகோர்ட்டின் செயலகத்திற்கான புதிய கட்டிட திறப்பு விழாவில் நேற்று பங்கேற்றார். இந்த விழாவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா, சட்டப்படிப்பில் நானும் தேர்ச்சிபெற்றுள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஒரு வழக்கறிஞர். என்னிடம் அடையாள அட்டையும் உள்ளது. நான் மனித உரிமை வழக்குகள் தொடர்பாக வழக்கறிஞராக ஆஜராகியுள்ளேன். உங்களுக்கு தெரியாது... என்றாவது ஒருநாள் நான் கோர்ட்டில் ஆஜராகலாம்.

மக்கள் நமது நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு பத்திரிக்கை மற்றும் நீதித்துறை மிகவும் முக்கியம். ஒன்று அதன் நம்பகத்தன்மையை இழந்தாலும் மற்றொன்றும் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிடும்.

நமது கோர்ட்டுகளில் அதிக பெண் நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும். பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது மிகக்குறைவாக உள்ளது' என்றார்.


Next Story