வங்காளதேச விவகாரம்: பீகாரில் கண்காணிப்பை பலப்படுத்த போலீசாருக்கு உத்தரவு


வங்காளதேச விவகாரம்:  பீகாரில் கண்காணிப்பை பலப்படுத்த போலீசாருக்கு உத்தரவு
x

ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகும் வங்காள தேசத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

பாட்னா,

வங்காள தேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு தனது தங்கையுடன் வெளியேறினார். தொடர்ந்து இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்துக்கு வந்த ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகும் வங்காள தேசத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அங்கு சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், வங்காள தேசத்தில் நிலவவும் அமைதியின்மை காரணமாக பீகாரில் கண்காணிப்பை பலப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூடுதல் காவல்துறை இயக்குநர் (தலைமையகம்) ஜே.எஸ்.கங்வார் கூறுகையில்,

வங்காள தேசத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக அனைத்து மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். மத்திய துணை ராணுவப் படையினருடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.


Next Story