கேரளாவில் கூடுதல் வட்டி தருவதாக கூறி 2 பெண்களிடம் 93 பவுன் நகை, ரூ.10 லட்சம் மோசடிபெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது
ஆர்ய ஸ்ரீ (வயது 47). இவர் அங்குள்ள வளாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தவனூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்ய ஸ்ரீ (வயது 47). இவர் அங்குள்ள வளாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு, தன்னுடன் படித்த திருச்சூர் பழையன்னூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை சந்தித்து, தான் வீடு கட்ட இருப்பதாகவும், அதற்கு பணம் தந்தால் அதனை ஒரு வருடத்தில் கூடுதல் வட்டியுடன் திருப்பி தருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் அந்த தோழி தன்னிடம் ரொக்கமாக பணம் இல்லை என கூறி தன்னிடம் இருந்த 93 பவுன் நகையை கொடுத்து உள்ளார்.
அதே போல் பாலக்காடு ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடமும் இவர் ரூ.10 லட்சம் ரொக்கம் வாங்கியுள்ளார். ஆனால் பல வருடங்கள் ஆன பிறகும் 2 பேருக்கும் அவர் கூறியபடி வட்டியையோ, வாங்கிய நகை மற்றும் பணத்தையோ திருப்பிக்கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 2 பேரும் ஒற்றப்பாலம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஆர்ய ஸ்ரீ யை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.