சிலையை கரைக்க சென்றபோது யமுனை நதியில் மூழ்கி 5 வாலிபர்கள் சாவு


சிலையை கரைக்க சென்றபோது யமுனை நதியில் மூழ்கி 5 வாலிபர்கள் சாவு
x

சிலையை கரைக்க சென்றபோது யமுனை நதியில் மூழ்கி 5 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

நொய்டா,

டெல்லி அருகே நொய்டாவின் சலார்பூர் கிராமத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் கிருஷ்ணர் சிலை ஒன்றை கரைப்பதற்காக நேற்று முன்தினம் யமுனை நதிக்கு எடுத்து சென்றனர். அங்குள்ள பாலம் ஒன்றின் அடியில் அவர்கள் ஆற்றில் சிலையை கரைத்தனர்.

பின்னர் அங்கேயே குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென நதியில் வெள்ளம் அதிகரித்தது. இதில் 5 வாலிபர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த டெல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 5 வாலிபர்களின் உடல்களையும் மீட்டு சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசார்ணை நடத்தி வருகின்றனர்.


Next Story