காவிரியில் தமிழகத்திற்கு இதுவரை 416 டி.எம்.சி. தண்ணீர் திறப்பு; கர்நாடக அரசு தகவல்


காவிரியில் தமிழகத்திற்கு இதுவரை 416 டி.எம்.சி. தண்ணீர் திறப்பு; கர்நாடக அரசு தகவல்
x

காவிரியில் தமிழகத்திற்கு இதுவரை 416 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடக மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் தினேஷ் கோலிகவுடா கேட்ட கேள்விக்கு நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் பதிலளிக்கையில் கூறியதாவது:-

காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) திறந்துவிட வேண்டும். நடப்பு ஆண்டில் கடந்த 12-ந் தேதி வரை தமிழகத்திற்கு 416.65 டி.எம்.சி. நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது பிலிகுண்டுலுவில் உள்ள நீர் அளவீட்டு கருவியில் பதிவாகியுள்ளது. இதில் கடந்த ஜூன் மாதம் 16.46 டி.எம்.சி., ஜூலையில் 106.93 டி.எம்.சி., ஆகஸ்டில் 223.57 டி.எம்.சி., நடப்பு மாதத்தில் கடந்த 12-ந் தேதி வரை 69.69 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.


Next Story