சிறுமியை பலாத்காரம் ெசய்த வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை; மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை பலாத்காரம் ெசய்த வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை; மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு
x

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

மங்களூரு:

சிறுமி பலாத்காரம்

மங்களூரு நகர் கங்கனாடி பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 46). கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே 4 வயது சிறுமி ஒருவள் பெற்றோருடன் வசித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தனர். இதனால் சிறுமி மட்டும் தனியாக இருந்தாள். இதனை அறிந்த வினோத் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதனால் சிறுமி கதறி அழுதாள். இதனை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், வினோத்தை கையும், களவுமாக பிடித்து கங்கனாடி போலீசில் ஒப்படைத்தனர்.

3 ஆண்டு சிறை

இதுகுறித்து கங்கனாடி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி ராதாகிருஷ்ணா நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அப்போது வினோத் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.


Next Story