ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும் விமான நிலையங்கள்... முதல்-மந்திரியின் திட்டம்!


ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும் விமான நிலையங்கள்... முதல்-மந்திரியின் திட்டம்!
x
தினத்தந்தி 21 Jan 2022 10:38 AM GMT (Updated: 21 Jan 2022 10:38 AM GMT)

ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும் விமான நிலையங்கள் அமைக்க முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் விமானம், துறைமுகம் மற்றும் மீன்பிடி துறைமுகம் ஆகிய துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அவ்வாறு அமைக்கப்படும் விமான நிலையங்களில் உள்நாட்டு விமானங்கள், வெளிநாட்டு விமானங்கள், போயிங் ரக விமானங்கள் என பல்வேறு விமானங்களையும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார். ஆந்திராவில் தற்போது விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி, ராஜமகேந்திரவரம், கர்னூல் மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் விமான நிலையங்களில் உள்ளன. 

இந்த நிலையில் அரசின் திட்டப்படி முதற்கட்டமாக ராமையன்பட்டினம், மச்சிலிபட்டினம், பாவனப்பாடு உள்ளிட்ட 7 இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 9 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் ஆந்திர மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story