ரேக்ளா பந்தயம் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி


ரேக்ளா பந்தயம் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 16 Dec 2021 8:57 PM GMT (Updated: 16 Dec 2021 8:57 PM GMT)

ரேக்ளா பந்தயத்திற்கு உரிய விதிகளை பின்பற்றி நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

ஜல்லிக்கட்டு, காளை விரட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்டவைக்கு கடந்த 2014-ம் ஆண்டு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் சட்ட திருத்தங்களை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு மற்றும் காளை விரட்டு விளையாட்டுகளை நடத்தி வருகிறது. இந்த சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு முன் நிலுவையில் இருந்து வருகிறது. 

இந்த நிலையில் மராட்டியத்தில் ரேக்ளா பந்தயம் நடத்த அனுமதி கேட்டு அம்மாநில அரசு தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மராட்டிய அரசு சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். இதனையடுத்து நீதிபதிகள், ரேக்ளா பந்தயத்திற்கு உரிய விதிகளை பின்பற்றி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

Next Story