ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை


ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
x
தினத்தந்தி 2 July 2021 4:16 PM IST (Updated: 2 July 2021 4:16 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் ஹஞ்சின் ராஜ்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் ஹஞ்சின் ராஜ்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் காஷி உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று பேரும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

Next Story