அனுமன் பழங்குடி இனத்தவர்; தேசிய பழங்குடி ஆணைய தலைவர் பேச்சால் சர்ச்சை


அனுமன் பழங்குடி இனத்தவர்; தேசிய பழங்குடி ஆணைய தலைவர் பேச்சால் சர்ச்சை
x
தினத்தந்தி 29 Nov 2018 7:17 PM IST (Updated: 29 Nov 2018 7:17 PM IST)
t-max-icont-min-icon

ஆஞ்சநேயரை தலித் என யோகி ஆதித்யநாத் கூறி சர்ச்சையான நிலையில் அவர் பழங்குடி இனத்தவர் என தேசிய பழங்குடி ஆணைய தலைவர் கூறி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசும்பொழுது, பஜ்ரங் பாலி ஒரு பழங்குடியினர், வனத்தில் வாழ்ந்தவர், ஒரு தலித் என கூறினார்.

அவர் அனைத்து இந்திய சமூகத்தினரையும் வடக்கில் இருந்து தெற்கு மற்றும் கிழக்கில் இருந்து மேற்கு வரை ஒன்றிணைக்க பணியாற்றினார் என பேசினார்.  இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின தலைவர் நந்த் கிஷோர் சாய் இன்று பேசும்பொழுது, முறையான கல்வி இல்லாமல் சமூகம் வளர்ச்சி அடைய முடியாது என கல்வியின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி பேசினார்.

அதன்பின்னர் அவர், பெரும் பலம் மற்றும் வலிமை வாய்ந்த, ராமரின் சிறந்த பக்தரான, வனத்தில் வாழ்ந்த, பவன்புத்திரா மற்றும் கேசரிநந்தன் என்றும் அழைக்கப்படுகின்ற அனுமன் பழங்குடியினத்தினை சேர்ந்தவர் என கூறி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

Next Story