பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பாதிரியார்கள் மீது வழக்குப்பதிவு
கேரளாவில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பாதிரியார்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவைச் சேர்ந்த ஒரு பெண் திருமணத்துக்கு முன்பு, தான் ஒருவருடன் ‘உறவு’ வைத்துக்கொண்டது பற்றி அப்பகுதியில் உள்ள தேவாலயத்தின், பாதிரியார் ஒருவரிடம் தெரிவித்து பாவ மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் இந்த ரகசியத்தை அந்த பாதிரியார் சக பாதிரியார்கள் 3 பேரிடம் தெரிவித்தார். அது மட்டுமின்றி இதை கணவரிடம் கூறாமல் இருக்க தங்களுடைய ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி அவரை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். இதன் மீது தீவிர விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பாதிரியார்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
ஏற்கனவே தேவாலய நிர்வாகம் 4 பாதிரியார்களையும் பணியிடை நீக்கம் செய்திருப்பது, குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story