பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேஷியாவுக்கு சென்று சேர்ந்துள்ளார்


பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேஷியாவுக்கு சென்று சேர்ந்துள்ளார்
x
தினத்தந்தி 29 May 2018 1:57 PM GMT (Updated: 29 May 2018 1:57 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேஷியாவுக்கு இன்று சென்று சேர்ந்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் ஜூன் மாதம் 2ந்தேதி வரை இந்தோனேசியா, சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்தோனேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 70 ஆண்டு காலமாக ராஜ்யரீதியிலான உறவு உள்ளது. இந்தநிலையில் அங்கு செல்கிற பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேச இருக்கிறார்.  இந்த பயணத்தின்போது இந்தோனேசியாவுடன் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா பல ஒப்பந்தங்களை செய்து கொள்ளும்.

இந்தோனேசியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.  இந்நிலையில், பிரதமர் மோடி இந்தோனேஷியாவுக்கு சென்று சேர்ந்துள்ளார்.

அங்கு அவர் ஜகர்தா நகரில் அதிபர் விடோடோவுடன் ஆலோசனை மேற்கொள்வார்.  அங்குள்ள உயர் அதிகாரிகளிடம் உரையாடும் அவர் இந்தோனேஷியாவில் உள்ள இந்திய சமூகத்தினரிடமும் பேச உள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி ஜகர்தா நகரில் இந்தியர்கள் மத்தியில் நாளை மாலை 4 மணியளவில் உரையாற்ற இருக்கிறார்.

அதன்பின்னர் அவர் மலேசியா நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார்.  அங்கு அவர் புதிய பிரதமர் மஹதீர் முகமதுவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறார்.

Next Story