பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு ராணுவ தளபதி நேரில் அஞ்சலி


பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு ராணுவ தளபதி நேரில் அஞ்சலி
x

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 அதிகாரிகள் உள்பட 3 ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் ராணுவவீரர்கள் அணிவகுத்து சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 அதிகாரிகள் உள்பட 3 ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று காஷ்மீர் வந்தார். பின்னர் அவர் பதாமிபாக் ராணுவ பாசறைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டு உள்ள ராணுவவீரர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து அவர் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


Next Story