புதிய கல்வி கொள்கைக்கு நிதி ஒதுக்கியது கவலை அளிக்கிறது கனிமொழி எம்.பி. பேட்டி


புதிய கல்வி கொள்கைக்கு நிதி ஒதுக்கியது கவலை அளிக்கிறது கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 1 Feb 2017 9:00 PM GMT (Updated: 1 Feb 2017 7:52 PM GMT)

நாடெங்கும் எதிர்ப்பு உள்ள நிலையில் புதிய கல்வி கொள்கைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியிருப்பது கவலை அளிப்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

புதுடெல்லி,

நாடெங்கும் எதிர்ப்பு உள்ள நிலையில் புதிய கல்வி கொள்கைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியிருப்பது கவலை அளிப்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் குறித்து தி.மு.க.வைச் சேர்ந்த மேல்-சபை உறுப்பினர் கனிமொழி எம்.பி. டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏமாற்றம் தரும் பட்ஜெட்

மு.க.ஸ்டாலின் கூறியதுபோல இந்த பட்ஜெட் ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்த நிலையில் அவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இல்லை.

தமிழக மக்களை ஏமாற்றும் ஒரு பட்ஜெட்டாகத்தான் இதை பார்க்க முடிகிறது. பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டையும் சேர்த்ததால் ரெயில்வே தொடர்பான அறிவிப்புகள் இல்லை.

கவலை தருகிறது

ஜி.எஸ்.டி. வந்த பிறகு என்ன செய்வது? என்பதற்கு, முன் கட்டமைப்பாகத்தான் இந்த பட்ஜெட்டை பார்க்க முடிகிறதே தவிர, தெளிவாக எந்த திட்டமும் பட்ஜெட் வாயிலாக வெளியிடப்படவில்லை. நதிநீர் இணைப்பு, நீர் பங்கீடு பற்றி சொல்லப்படவில்லை.

புதிய கல்வி கொள்கைக்கு நாடெங்கும் எதிர்ப்பு உள்ள நிலையில் அதற்கு நிதி ஒதுக்கியிருப்பது கவலை தருவதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story