கோர்ட்டு நேரத்தை வீணடித்ததாக கூறி 2 தனியார் கல்லூரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


கோர்ட்டு நேரத்தை வீணடித்ததாக கூறி 2 தனியார் கல்லூரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Oct 2022 6:45 PM GMT (Updated: 8 Oct 2022 6:45 PM GMT)

கோர்ட்டு நேரத்தை வீணடித்ததாக கூறி 2 தனியார் கல்லூரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு மற்றும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் 2 தனியார் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு தகுதிபெற்ற மாணவர்களை தேர்வு செய்ய கர்நாடக தேர்வாணையத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்த கல்லூரிகள் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு கடந்த மே மாதம் கலந்தாய்வு நடைபெற்றது. தற்போது இந்த 2 கல்லூரிகளும் தங்களிடம் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக கர்நாடக தேர்வாணைத்தை அனுமதிக்க கோரி உள்ளது. சுயலாபத்திற்காக கோர்ட்டு நேரத்தை வீணடித்ததற்கு 2 தனியார் கல்லூரிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story