டெல்லியில் 173 கால்நடைகளுக்கு தோல் தொற்று நோய்! தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்


டெல்லியில் 173 கால்நடைகளுக்கு தோல் தொற்று நோய்! தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
x

டெல்லியில் 173 கால்நடைகள் லம்பி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், அரியானா, இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் தோல் கழலை நோய் அல்லது லம்பி தோல் நோயால் (எல்.எஸ்.டி.) கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் டெல்லியின் தென்மேற்கு மாவட்டத்தில் 173 கால்நடைகள் லம்பி வைரஸ் என்றழைக்கபடும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் முதல் வழக்கு 10 நாட்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது என்றும் இந்த நோயால் இதுவரை எந்த மரணமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் பரவாமல் இருக்க கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story