கடந்தாண்டு காஷ்மீரில் 1,700 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது - போலீசார் தகவல்


கடந்தாண்டு காஷ்மீரில் 1,700 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது - போலீசார் தகவல்
x

காஷ்மீரில் கடந்தாண்டு 1,700 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரில் போதை பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காஷ்மீரில் கடந்தாண்டு கிட்டத்தட்ட1,700 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீரில் பணம், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் என பெருமளவிலான கடத்தல் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 1,021 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட1,700 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருள்களில் 212 கிலோ கிராம் சரஸ், 56 கிலோகிராம் ஹெராயின், 13 கிலோகிராம் பிரவுன் சுகர், 1.127 டன் பாங், 4.355 டன் பாப்பி ஸ்ட்ரா மற்றும் 1.567 டன் ஃபுக்கி ஆகியவை அடங்கும்.

சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட கசகசா மற்றும் பாங்கிற்கு எதிரான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 51 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவியிருந்த பயிர்களை அழித்துள்ளனர் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான போர் மேலும் வீரியத்துடன் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story