ஜூலை 2022 வரை 152.5 கோடி ஆதார் எண் சரிபார்ப்பு: இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் தகவல்!


ஜூலை 2022 வரை 152.5 கோடி ஆதார் எண் சரிபார்ப்பு: இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் தகவல்!
x

ஜூலை 2022 இறுதிக்குள், இதுவரை 134.11 கோடிக்கும் அதிகமான ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் ஆதார் பதிவு, பயன்பாடு போன்ற செயல்பாடுகள் நடந்து வருகிறது.ஜூலை 2022 இறுதிக்குள், பொதுமக்களுக்காக இதுவரை 134.11 கோடிக்கும் அதிகமான ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜூலை 2022 வரை 152.5 கோடி ஆதார் எண் சரிபார்க்கப்பட்டுள்ளது. புதிதாக 53 லட்சம் ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் 18 வயதுக்கு குறைவானவர்கள் அதிகம்.

ஜூலை மாதத்தில், ஆதார் மூலம் 152.5 கோடி அங்கீகார பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாதாந்திர பரிவர்த்தனை எண்களில் பெரும்பாலானவை கைரேகை பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி (122.57 கோடி), அதைத் தொடர்ந்து தனிநபர் அடையாளங்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டன.

ஜூலை மாதத்தில் 1.47 கோடி ஆதார் அட்டைகளில் பல்வேறு தகவல்கள் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து இதுவரை (ஜூலை இறுதி) 63.55 கோடி ஆதார் எண்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த புதுப்பிப்புப் பணிகள் பயோமெட்ரிக் அடிப்படையில் ஆதார் மையங்களிலும், ஆன்லைன் ஆதார் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுமார் 900 மத்திய, மாநில சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் பயன்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் வழியாக பணம் பட்டுவாடா செய்யப்படும் முறையில் பயனாளிகளுக்கு ரூ.12,511 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story