மராட்டிய மந்திரி மீது கருப்பு மை வீச்சு: 3 அதிகாரிகள் உள்பட 10 போலீசார் பணி இடைநீக்கம்


மராட்டிய மந்திரி மீது கருப்பு மை வீச்சு: 3 அதிகாரிகள் உள்பட 10 போலீசார் பணி இடைநீக்கம்
x

மராட்டிய மந்திரி மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 அதிகாரிகள் உள்பட 10 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

புனே,

மராட்டிய மாநில உயர்கல்வி துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் கடந்த சில நாட்களுக்கு முன் அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். அவரது பேச்சுக்கு மாநிலத்தில் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் மீது புனே மாவட்டம் பிம்பிரி பகுதியில் கருப்பு மை வீசப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்து உள்ளனர்.

இந்தநிலையில் மந்திரியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 10 போலீசாரை புனே போலீஸ் கமிஷனர் அங்குஷ் ஷிண்டே அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "மந்திரி மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவத்தில் 3 அதிகாரிகள் உள்பட 10 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து உள்ளோம். அவர்கள் அனைவரும் மந்திரி வருகையின்போது அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள்" என்றார்.


Next Story