அரசு பள்ளி அருகே சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை


அரசு பள்ளி அருகே சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 May 2022 5:30 PM IST (Updated: 18 May 2022 5:30 PM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே அரசு பள்ளி அருகே சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாவூர்சத்திரம்:
நெல்லை - தென்காசி நெடுஞ்சாலை தற்போது, நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் நெல்லை - தென்காசி ரோட்டில் பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் அப்புறப்படுத்தப்பட்டு அந்த பகுதியில் இருந்த மரங்கள் மறுநடவு செய்யப்பட்டு விட்டன. அத்துடன் பள்ளி அருகே ஆங்காங்கே சாலை விரிவாக்கத்திற்கு முதற்கட்ட பணிகள் நடைபெற்றன.
தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மேலும் இந்த பள்ளியில் தற்போது தேர்வு எழுத வரும் மாணவர்கள் மட்டுமே வருவதால், குறைவான மாணவர்கள் வந்து செல்கின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும் போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளியின் சுற்றுச்சுவர் அமைத்து, சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story