சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வலியுறுத்தி மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன போராட்டம்


சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வலியுறுத்தி மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2019 10:00 PM GMT (Updated: 7 Dec 2019 7:53 PM GMT)

சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் பிடித்துச் செல்ல வலியுறுத்தி, மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாடு பிடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் பிடித்துச் செல்ல வலியுறுத்தி, மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாடு பிடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள்

நெல்லை மாநகர பகுதியில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சில நேரங்களில் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி மாநகர காவல் துறை, மாநகராட்சி ஆகியன இணைந்து சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டன. அந்த மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது. சில மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்படியிருந்தும் சாலைகளில் மாடுகளை சுற்றி திரிவதை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் அதிக அளவு மாடுகள் சுற்றி திரிகின்றன.

நூதன போராட்டம்

இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் நேற்று காலையில் மாடு பிடிக்கும் நூதன போராட்டம் நடந்தது. சட்டமன்ற தொகுதி தலைவர் மின்னதுல்லாஹ் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் ரவுண்டானா பகுதியில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்தனர். பின்னர் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர்கள் ஹயாத் முகமது, பர்கிட் அலாவுதீன், தொகுதி செயலாளர் சலீம்தீன், இணை செயலாளர் புஹாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் வந்து, சாலைகளில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து சென்றனர்.

Next Story