கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 16 டன் ரே‌‌ஷன் அரிசி பறிமுதல் - டிரைவர் கைது


கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 16 டன் ரே‌‌ஷன் அரிசி பறிமுதல் - டிரைவர் கைது
x
தினத்தந்தி 30 Nov 2019 10:00 PM GMT (Updated: 30 Nov 2019 2:40 PM GMT)

புளியரை சோதனைச்சாவடி வழியாக, கேரளாவுக்கு கடத்த முயன்ற 16 டன் ரே‌‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.

செங்கோட்டை, 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை சோதனைச்சாவடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.

இதில் லாரியில் ரே‌‌ஷன் அரிசி மூட்டைகள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 16 டன் ரே‌‌ஷன் அரிசியுடன் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டியைச் சேர்ந்த ராமசாமியை (வயது45) போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ரே‌‌ஷன் அரிசி மூட்டைகளை லாரியில் கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த லாரியில் இருந்த அரிசி மூட்டைகளை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து மற்றொரு லாரிக்கு மாற்றி உள்ளனர். பின்னர் அந்த லாரியில் ரே‌‌ஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது போலீசில் சிக்கியது தெரியவந்தது.

இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ரே‌‌ஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story