இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, தென்காசி தாலுகா அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை


இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, தென்காசி தாலுகா அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 26 Nov 2019 10:00 PM GMT (Updated: 26 Nov 2019 10:26 PM GMT)

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தென்காசி தாலுகா அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று முற்றுகையிட்டனர்.

தென்காசி, 

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை தென்காசி தாலுகா அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் மற்றும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை போன்றவையும் வழங்க வேண்டும் என்று கோரி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வட்டார குழு செயலாளர் அயூப்கான் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். சுமார் ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நடைபெற்றது.

பின்னர் தாசில்தார் சண்முகத்திடம் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, வேல்முருகன், குருசாமி, வள்ளி நாயகம், வட்டார குழு உறுப்பினர்கள் லெனின்குமார், கிரு‌‌ஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story