சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு ரூ.2¼ கோடி நலத்திட்ட உதவிகள் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வழங்கினார்


சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு ரூ.2¼ கோடி நலத்திட்ட உதவிகள் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 18 Nov 2019 11:00 PM GMT (Updated: 18 Nov 2019 8:43 PM GMT)

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு ரூ.2¼ கோடி நலத்திட்ட உதவிகளை ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

சேலம்,

முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சேலம் ஜாகீர்அம்மாபாளையத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் கலெக்டர் ராமன் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 19.8.2019 அன்று சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி, நங்கவள்ளியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த திட்டத்தின் கீழ் 56 ஆயிரத்து 267 மனுக்கள் பெறப்பட்டு 26 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சொத்து மதிப்பு காரணத்தால் மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் சொத்து மதிப்பால் தகுதியுடைய பயனாளிகளுக்கு ஓய்வூதியம் கிடைக்க தடையாக உள்ளதை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகை பெற குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, வீட்டுமனை பட்டா என மொத்தம் 1,805 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 37 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி திவாகர், உதவி கலெக்டர் மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story